பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மதுரை,பிப்.19:

மதுரையில் நடைபெற்ற பாஜக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த பாஜகவினர்.

ஒன்றிய அரசு சார்பாக பட்டியல் சமுதாய மக்களுக்கு கொடுக்கும் நிதியை தவறாக பயன்படுத்திய திராவிட மாடல் அரசை கண்டித்து மதுரை மாவட்டம் பாஜக பட்டியல் அணி சார்பாக மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் பட்டியல் என பிரிவு தலைவர் அலெக்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பட்டியல் அணிமாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாரி திருப்பதி முன்னிலையில் நடைபெற்றது. கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராமசீனிவாசன், மாவட்டதலைவர்கள் மாரி சக்கரவர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

அப்போது ராம சீனிவாசன் பேசும்போது: பாஜகவினர் நடந்தும் தெருமுனை கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்படுகிறது. காவல்துறையினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இன்னும் ஒரு சில மாதத்திற்குள் பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையும். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும். பாஜகவினருக்கு எதிராக செயல்படும் காவல்துறையினர் பின்புலம் விசாரிக்க வேண்டும். மேலும் மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள், அன்றைய தினம் மோடி தமிழ்நாட்டில் மதுரைக்கு வருகிறார். இதுதான் முதல்வருக்கு பரிசு. 100 ஆண்டுகள் முதல்வர் வாழ்வாங்கு வாழ வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் அருள் அவருக்கு கிடைக்கட்டும் அடுத்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *