வாடிப்பட்டியில் வாசன் கண் மருத்துவமனை சார்பாக நலம் நாடுபவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் வாசன் கண் மருத்துவமனை சார்பாக நலம் நாடுபவர்களுடன் கலந்துரையாடல் 2026 நிகழ்ச்சி நடைபெற்றது தலைமை மருத்துவர் கமல் பாபு
காட்ராக்ட் ரெட்டினா கிளக்கோமா போன்ற சிகிச்சை முறைகளை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசன் கண் மருத்துவமனை சிம்மக்கல்லில் புதிதாக திறக்கப்பட்டது பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.கண் நோய் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். மருத்துவர்கள் பிரேம்குமார் கோபால் அர்ச்சனா சௌந்தர்யா ராகினி சிறப்புரை ஆற்றினர். வாசன் ஐ கேர் பொது மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு மார்க்கெட்டிங் தலைமை விஜயன் பிரான்சிஸ் நன்றி கூறினார்.