அதிமுகவில் பொதுச் செயலாளர் என்றும், அதிமுக உரிமை மீட்பு குழு என தொடங்கியவர்கள் இன்றைக்கு எடப்பாடியார் தான் பொதுச்செயலாளர் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து விட்டு சென்று விட்டனர்

அதிமுகவில் பொதுச் செயலாளர் என்றும், அதிமுக உரிமை மீட்பு குழு என தொடங்கியவர்கள் இன்றைக்கு எடப்பாடியார் தான் பொதுச்செயலாளர் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து விட்டு சென்று விட்டனர்

அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்ட நபர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு மாறி செல்கிறார்கள் அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை

ஓபிஎஸ் திமுகக்கு சென்றது அதிமுகவுக்கு பலம், திமுகவுக்கு பலவீனம்

ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவி என்று ஸ்டாலின் அறிவிக்க முடியுமா?

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை

வருகின்ற ஒன்றாம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பாரத பிரதமரும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் மண்டேலா நகரில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு குடிநீர் , மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதலை காட்டும் வகையில் கழக அம்மா பேரவை சார்பில் சீருடை அணிந்த 2,500 தூதுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு பயிற்சி முகாம் மண்டல நகரில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ‌ முனியசாமி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன் எஸ் எஸ் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது

கடந்த நான்கரை ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை செய்து மக்களின் நம்பிக்கை பெற்றவர் எடப்பாடியார், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என மக்கள் தீர்ப்பு எழுத தயாராகி விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து பாரத பிரதமர் மோடி ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பரப்புரை ஆற்றினார் .தற்பொழுது இரண்டாம் கட்டமாக தேர்தல் பரப்பரை செய்கிறார் இந்த பரப்பரை என்பது எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சியை மலர செய்யும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இந்த கூட்டம் இருக்கும்

ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த கூட்டம் 150 ஏக்கரில் வாகன நிறுத்தம் இடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் .ஏற்கனவே பாஜக சார்பில் இளைஞர்கள் பெண்கள் சேவை செய்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவையின் சார்பில் 2500 ஆண்கள், பெண்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு வழிகாட்டும் தூதுவர்களாக அம்பாசிடராக பணிபுரிய உள்ளார்கள் அவர்களுக்கு தற்போது பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது.

புரட்சித்தலைவர் 17.10. 1972 ஆம் ஆண்டில் இந்த இயக்கத்தை ஏழை எளிய மக்களுக்காக தோற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா மூன்றாவது பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். அம்மாவின் மறைவிற்கு பிறகு இரண்டரை கோடி தொண்டர்களும்,
8 கோடி மக்களும் எடப்பாடியாரை மனதார வரவேற்று உள்ளார்கள்.

அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்ட நபர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு மாறி செல்கிறார்கள் அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு என்பது புதிதல்ல.

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காலத்திலேயே இது போன்ற சிலர் மாற்று முகாம்களுக்கு சென்று உள்ளனர் அப்படி செல்பவர்களை பற்றி மக்கள் ஒன்றும் பொருட்படுத்த மாட்டார்கள்.

உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நரேந்திர மோடி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவராக உள்ள எடப்பாடியாரை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வருகை தருகிறார். இதனை முன்னிட்டு இதை திசை திருப்பவும், மடைமாற்றமும் செய்யவும், இதுபோன்ற செயல்களை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதையெல்லாம் நாங்கள் சவாலாக மன உறுதியுடன் எதிர்கொள்வோம்.
2026 ல் எடப்பாடியார் தான் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக வருகை தர உள்ளார்.

தற்போது அதிமுகவில் உரிமை மீட்பு குழு என்றும், ஒருவர் அதிமுக பொதுச் செயலாளர் என்றும் சிலர் குழப்பம் செய்து வந்தனர். புரட்சித்தலைவர் என்றால் அதிமுக பொதுச் செயலாளர்,
அம்மா என்றால் அதிமுக பொதுச்செயலாளர் , இனிமேல் எடப்பாடியார் என்றால் அதிமுக பொதுச்செயலாளர் என்று
ஒப்புதல் வாக்குமூலத்தை தற்போது கொடுத்துவிட்டார்கள்.இவர்கள் மாற்று முகாமுக்கு செல்வதால் அதிமுகவிற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. இனி அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை இன்றைக்கு அதிமுக எடப்பாடியார் பின்னால் வலிமையுடன் உள்ளது.

கடந்த தேர்தலில் நாங்கள் சந்தித்தபோது மாற்றுமுகம் சென்றவர்கள் இருந்தார்கள், களத்திற்கு வராதவர்கள் இருந்தார்கள் அந்த தேர்தலில் திமுக பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை செய்தார்கள் அதையும் மீறி தேர்தலை சந்தித்தோம் 43 தொகுதிகளில் 1.97 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தால் இன்றைக்கு எடப்பாடியார் ஆட்சியில் இருந்திருப்பார். நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம் திமுக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை.

இன்றைக்கு எடப்பாடியார் 15 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். குறிப்பாக விலைவாசி உயர்வை சீர் செய்ய 10 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளார இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் படித்த இளைஞர்களுக் 2000 ரூபாய் ,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய்,
5 லட்சம் மகளிர்க்கு இருசக்கர வாகனம், கல்விக் கடன் ரத்து, மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை எனத் தேர்தல் அறிக்கை அறிவித்துள்ளார் இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது

பொதுவாக மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் திட்டங்களை பெற முடியும் இணக்கமாக இருந்ததால் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை எடப்பாடியார் பெற்றுக் கொடுத்தார். அதைத்தான் பாரத பிரதமர் மத்திய அரசும், மாநில அரசும் டபுள் இன்ஜின் போல இருக்க வேண்டும் அப்போதுதான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் .

ஆனால் ஸ்டாலினும் இதை ஓடாத இஞ்சி என்று கூறியுள்ளார் ஸ்டாலின் கூறுவது விவாதத்துக்கு அழகாக இருக்கும் ஆனால் வாழ்வாதாரத்திற்கு அழகாக இருக்காது

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பல பொய்யான பரப்புரையை திமுக செய்து வருகிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி தந்தது.இதில் பெயர் மாற்றம் தான் செய்தது அதற்கு நாங்கள் எடுத்துக் கூறினோம் மத்திய அரசும் அதை பரிசீலனை செய்கிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 20 நாட்கள் கூட நடைபெறவில்லை.

தலைநகர் டெல்லியில் இருப்பது போல சாமானிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்று மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அதனைப் பெற்றுக் கொடுத்தவர் எடப்பாடியார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும் , வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் செங்கோலை அவரது கையால் பிடிப்பார்.

நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அவர் இன்னும் பரீட்சை எழுதவில்லை தற்போது தான் பரீட்சை எழுத செல்கிறார் பரிச்சை எழுத செல்பவர்களிடம் கேட்டால் அனைவரும் நாங்கள் பாஸ் ஆகும் என்று தான் கூறுவார்கள் என யாரும் கூற மாட்டார்கள்.அதுபோல் நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும்.

அதிமுகவில் சாதாரண எளிய தொண்டரை முதலமைச்சராக ஆக்கி அழகு பார்க்கப்பட்டுள்ளது. திமுகவில் இதேபோல் ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக ஸ்டாலின் அறிவிப்பாரா? ஒபிஎஸ் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவிற்கு பலவீனம் அதிமுகவிற்கு பலம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *