அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி எனும் இந்திய அமைப்புச் சட்டத்திற்கு மாறான பாகுபாட்டைக் களைய வலியுறுத்தியும், அரசுக் கல்லூரிகளில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருவது போல், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மூட்டா அமைப்பு சார்பாக கல்லூரி பேராசிரியர்கள் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கேட்கும் கோரிக்கைகள் தொடர்பான அரசாணைகள் இருந்தும் அவை செயல்படுத்தப்படாததால்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுப்பட்டம் இழந்துள்ளனர்.
ஆகவே அரசாணைகளை செயல்படுத்துவதை சரி செய்திடக் கோரியும் கல்லூரி பேராசிரியர்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பும் அலுவலகத்தின் வளாகத்திலும் பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.