வைத்தீஸ்வரன்கோயிலில்தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18 வது ஆண்டு விழா மாவட்ட கூடுதல் ஆட்சியர் கோகுல் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் அமைந்துள்ள
தருமை ஆதீனம் உதவிபெறும் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18 வது ஆண்டு விழா ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி நிர்வாக குழு தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.பள்ளி செயலர் வி.பாஸ்கரன் பள்ளியின் பொருளாளர் எஸ்.பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் கோகுல் கலந்து கொண்டு பள்ளி ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார் பின்னர் பள்ளியில் முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் பிடித்த மாணவர்களுக்கும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் கேடயமும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார் இவ்விழாவில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இவ்விழா நிறைவாக
பள்ளி முதல்வர் ஏ.ஜெகதீஷ் குமார் நன்றி உரையாற்றி நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *