மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெடரல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக ரூபாய் 2.72 லட்சம் மதிப்பீட்டில் 50 மேசை – இருக்கை நாற்காலிகளை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் “குடிநீராகும் கூரை நீர்”, “கழிவுநீர் மேலாண்மை” மற்றும் “வழிபாட்டு மலர்களால் ஏற்படும் நீர் மாசுபாடு – காய்ந்த மலர்களில் இருந்து சாம்பிராணி தயாரித்தல்” உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த புதுமையான மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, மாணவர்களின் புதுமை முயற்சிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.