தமிழகத்தில் சிறுமிக்கும் பாதுகாப்பில்லை; பாட்டிக்கும் பாதுகாப்பில்லை – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்*
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் விஜய், தேர்தலுக்கு முன்பு விர்ச்சுவல் வாரியர்ஸை எவ்வளவு நேசித்தாரோ, அதைவிட ஒரு படி மேலே போய் தேர்தல் நேரத்தில், “உங்கள் மாமா, உங்கள் விஜய், உங்கள் அங்கிள் எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்” என குழந்தைகளிடத்தில் பிஞ்சு மனதில் பச்சை மரத்தில் ஆணி அடித்ததைப் போல பதிவு செய்து, அதன் மூலம் அவர் வெற்றியும் பெற்றார்.
விஜய்க்காக தந்தையிடம், தாயிடம், தாத்தாவிடம், பாட்டியிடம், மாமாவிடம் அடம் பிடித்து விஜய்க்கு வாக்குகளைப் பெற்றுத் தந்த அந்தக் குழந்தைகளின் நிலைமைதான் அந்தோ பரிதாபமாக இருக்கிறது.
தவெக ஆட்சியில் நான்கு மாதங்களில் ஐந்து குழந்தைகள் மாயமான சம்பவங்கள், அந்தக் காட்சிதான் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதா? காவல்துறை அழுத்தத்தில் உள்ளதா? ஏனென்றால், இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை, தமிழ்நாட்டில் மாயமா