தற்போது 5 மாத தவெக ஆட்சி என்பது தூய ஆட்சி அல்ல துருப்பிடித்த ஆட்சியாக உள்ளது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி
5 மாத தவெக ஆட்சியில் விஜயின் சாயம் வெளுத்து விட்டது
தற்போது 5 மாத தவெக ஆட்சி என்பது தூய ஆட்சி அல்ல துருப்பிடித்த ஆட்சியாக உள்ளது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரை
கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க
55 ஆண்டு கழகத் தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கழக கொடியினைஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அரும்பனூரில் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ஜெயசீலன் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர் சேனாபதி, மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கா.அரசு ஆகியோர் முன்னிலை வைத்தனர் .ஒன்றிய கழகச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்
கழகக் கொடியேற்றி ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ,மருத்துவ முகாமை கழக அமைப்புச் செயலாளரும் ,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் கோட்டை காளை, மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் கர்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் அம்பலம்,
மற்றும் ராஜசிம்மன், நீதிதேவன், முத்துராமலிங்கம், திருக்கானைராஜ்குமார் ,மகேந்திரன், வசவன் பால்பாண்டி,கோகுல்நாத், அம்மா பேரவை ராஜேந்திரன், ஜெயபிரகாஷ், தீனதயாளன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ராஜன் செல்லப்பா கூறியதாவது
கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழக 55 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கழகத்தினர் கொண்டாடி வருகிறார்கள் .ஆங்காங்கே கழக கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ முகாம் நடத்தி அதிமுகவிற்கு வலிமை சேர்த்து வருகிறார்கள் .
அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் இயக்கம் ஆகும்.
அதிமுகவை தொடர்ந்து விஜய் கபளீகரம் செய்ய தூந்துபோன கட்சி என்று விமர்சனம் செய்து வருகிறார் எத்தனை விஜய் வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. இது தூர்ந்து போன கட்சி அல்ல மக்களுக்கு தீர்வு காணும் கட்சி .
புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா காலங்களில் அதிமுகவிற்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது அந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து வெற்றி வரலாறு படைத்தார்கள் .அதேபோல எடப்பாடியார் இந்த சோதனைகளை தகர்த்தெறிந்து வெற்றி வரலாறு படைப்பார் அதிமுக சந்திக்காத வெற்றியும் இல்லை ,சந்தித்தாத தோல்வியும் இல்லை.
ஐந்து மாதங்களுக்கு முன்பு விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும் ,அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பொழுது தூய ஆட்சி தருவேன் என்று கூறினார் ஆனால் தற்போது துருப்பிடித்துப் போன ஆட்சியாக உள்ளது .
தமிழகத்தில் கொலை, கொள்ளை, நடக்காத நாளே இல்லை, தொடரும் மின்வெட்டு அதனால் மக்கள் வீதியில் போராட்டம் செய்கிறார்கள்.
தற்பொழுது 5 மாத ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் நடைபெற்று வருகிறது
குறிப்பாக மின் கொள்முதலில் எந்த மாநிலம் வாங்காத விலையில் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்து தினந்தோறும் 77 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாதது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் இப்படி ஊழலில் கறை படிந்த ஆட்சியாக தவெகஆட்சி இருக்கிறது இதனால் விஜயின் சாயம் வெளுத்து விட்டது.
அதேபோல கடுமையான விலைவாசி உயர்வினால் இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாய் அளவில் சுமை ஏற்பட்டுள்ளது .விஜய்க்கு வாக்களித்த மக்கள் ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்ற கவலை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது .
மக்கள் மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் .நிச்சயம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி நிச்சயம் மலரும் என கூறினார்.