மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நம்பர் பிளேட் இல்லாத தவெக கொடியுடன் நின்ற இன்னொவா காரால் பரபரப்பு
பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே நம்பர் பிளேட் இல்லாமல் நின்ற கார் குறித்து காவல்துறை விசாரணை
செப்டம்பர் 17ந்தேதி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அன்றிலிருந்து கோவிலுக்கு தினமும் ஆயிரம் காக்கா காண பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதன் காரணமாக, கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், சித்திரை வீதிகள் போன்ற பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய வீதிகளில் வாகனங்கள் நுழைவதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவிலில் நான்கு கோபுரங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் நீதிபதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் மட்டுமே மதுரை மாநகர காவல் துறையில் உரிய அனுமதி பெற்று சித்திரை வீதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதோடு மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதி பகுதியில் மாநகர காவல் துறை சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இரவு நம்பர் பிளேட் இல்லாத தவெக கொடி கட்டிய இன்னோவா கார் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு சித்திரை வீதி பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. நம்பர் பிளேட் இல்லாத காரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பக்தர்கள்.
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மிக அதிகப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் இடங்கள் என்பதால், மீனாட்சியம்மன் கோவில் அருகே சித்திரை வீதிக்குள் நம்பர் பிளேட் இல்லாத கார் வந்தது எப்படி என பக்தர்கள் கேள்வியை எழுப்பி உள்ளனர்? இது குறித்து கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.