ஆரியங்காவு திருக்கோவிலில், S.S. சரவணன் B.E., M.Tech Ex.MLA தலைமையில் நடக்கும் கும்பாபிஷேக பணிகளை மேற்பார்வையிடவும், வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஆரியங்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா- ஸ்ரீ புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடத்த வேண்டியும், ஆரியங்காவு திருக்கோவிலில் உள்ள மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்
கும்பாபிஷேக குழு தலைவர் S.S.சரவணன் ex.MLA ,
திருவாங்கூர் தேவசம்போர்டு மெம்பர் முன்னாள் அமைச்சர் கே ராஜு,
ஆரியங்காவு பகுதி MLA , அஜய் பிரசாத்,
ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவர் ரமணி,
ஆரியங்காவு கோவில் பகுதி கவுன்சிலர் சின்சிமோல்,
திருவாங்கூர் தேவசம் போர்டு A.E. பிரதீப்,
A.E.E. ஷியாம்,
ஆரியங்காவு கோயில் சப் குரூப் ஆபீஸர் திரு. அஜி,
ஆரியங்காவு கோயில் அட்வைஸரி கமிட்டி தலைவர் திருமதி. லேகா கோபாலகிருஷ்ணன்,
செயலாளர் திரு. கணேசன் மற்றும் கமிட்டி மெம்பர்கள்,
நமது சங்க பொருளாளர் திரு S.K. ரவிச்சந்திரன்,
தென்மலை அஜித்,
ஆரியங்காவு முன்னாள் அட்வைஸரி கமிட்டி மெம்பர்கள்,
ஊர் மக்கள்
மற்றும்
சுகாதாரத் துறை, காவல் துறை, வனத்துறை, பஞ்சாயத்து போர்டு
ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஆலோசித்த விஷயங்கள்- தற்போது திரு S.S. சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கும்பாபிஷேக பணிகள் சிறப்பாகவும், திருப்தி கரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது என்று பாராட்டி, அதனை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அனைவரும் கேட்டுக் கொண்டனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, அனைத்து தரப்பினரும் தங்களது ஆதரவை ஆதரவையும், ஒத்துழைப்பும் நல்குவதாக தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் உள்ள சில இடர்பாடுகளை நீக்கி, மிகச் சிறப்பாக நடத்த சில ஆலோசனைகளை, S.S. சரவணன் வழங்கினார். அதை இந்த கூட்டத்தினர் ஏற்று, விழா சிறப்பாக நடத்துவதற்கு முடிவு செய்தனர்.