மின் தடையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுகின்றதா? என்ற கேள்விக்கு “துறை ரீதியான கேள்வி கேட்கவும்” என அமைச்சர் மதன்ராஜா அதிர்ச்சி பதிலளித்தார்

மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் பதிவு பெற்ற அறிவுசார் சொத்துரிமை, புவிசார் குறியீடு பெற்ற மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா துவக்கி வைத்து பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதன் ராஜா கூருகையில் “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் தமிழகத்தில் தயாரிக்கப்படும் 70க்கும் மேற்பட்ட பொருட்கள் சொத்துரிமையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை சொத்துரிமைக்கில் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 95% தொழில்கள் குறு தொழில்களாக உள்ளன. மீதமுள்ள 5% தொழில்கள் சிறு, நடுத்தர தொழில்கள் உள்ளன. ஆகவே, சிறு, நடுத்தர தொழில்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிட்கோ மூலம் குறு, சிறு நடுத்தர தொழில்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும், 4 ஆண்டுகளாக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மானியத் தொகை விடுவிக்கப்படவில்லை. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று 1,500 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தனியாரிடம் இருந்து நேரடியாக மின்சாரத்தை கொள்முதல் செய்யப்படுவது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சரிடம் ஆலோசனை செய்து வருகிறோம். இது முடிவுகளை அறிவிப்போம்” என கூறினார். மின் தடையால் சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றதே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு “குறு, சிறு, மற்றும் நடுத்தரத் துறை ரீதியான கேள்வி கேட்கவும்” என அமைச்சர் பதிலளித்தார். STARTUP நிகழ்ச்சிகளை பள்ளிகளில் இருந்தே தொடங்குகிறோம், 8 ஆம் வகுப்பில் இருந்தே மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம், கல்லூரி மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்க மாவட்ட தொழில் மையம் மூலமாக அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், சிறு, குறு தொழில் சாலைகளுக்கான சோலார் மின்சாரம் விநியோக பகிர்வு குறித்தும், மின்சாரத்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *