சிலிண்டர் வெடித்து விபத்து – கணவன் – மனைவி – குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி*
மதுரை திருப்பாலை முத்தீஸ்வரர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (29) – முத்துலட்சுமி்(21) தம்பதியினர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் இன்று காலை வீட்டில் இருந்தபோது டீ போட சென்றபோது கேஸ் சிலிண்டரில் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
இதில் சிவசங்கர் (29) – முத்துலட்சுமி்(21) தம்பதியருக்கு 60% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டு மூவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்
கேஸ் சிலிண்டர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பலத்த காயமடைந்து சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்