மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நவராத்திரி விழா – கோவில் நிர்வாகம் அறிவிப்பு
நவராத்திரி விழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணிவரை மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும் அப்போது பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது – கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும், 25ஆம் தேதியன்று சாந்தாபிஷேகம் நடைபெறும். நவராத்திரி உற்சவ நாட்களில் மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துதல், தங்ககவசம் சாத்துதல், உபயதிருக்கல்யாணம் மற்றும் தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது எனவும்,
நவராத்திரி உற்சவ நாட்களில் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேட பூஜைகள் இரவு 08.30 மணி வரை நடைபெறும். எனவே, மேற்படி பூஜை கால நேரங்களில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது.
நவராத்திரி உற்சவ நாட்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குத் தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை திருக்கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை மற்றும் வீணை இசைக் கச்சேரி, போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும் கொலுச்சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்குபவர்கள், சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான மற்றும் இதர பொம்மைகளை வழங்குபவர்கள் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
11 ஆம் தேதி இராஜராஜேஸ்வரி அலங்காரமும்,
பட்டாபிஷேக திருக்கோலம் 12 ஆம் தேதி அர்த்தநாரீ்ஸ்வரர் அலங்காரமும், 13 ஆம் தேதி கோலாட்டம், 14 ஆம் தேதி பட்டாபிஷேக திருக்கோலம், 15 ஆம் தேதி தபசு திருக்கோலம், 16 ஆம் தேதி ஊஞ்சல் , 17 ஆம் தேதிமுத்தங்கி சேவை, 18 ஆம் தேதி மஹிஷாசுரமர்த்தினி, 19 ஆம் தேதி சிவ பூஜை என ஒவ்வொரு நாளும் கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் ஒவ்வொரு கோலத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார்.
இதேபோன்று திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 09.30 மணிவரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை மற்றும் வீணை இசைக் கச்சேரி, போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் கோவில் இணை ஆணையர் தரப்பில் செய்தி் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.