சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’ திண்டுக்கல்லில் வரும் அக். 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதால் முன்பதிவு அவசியம்- மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மதுரையில் பேட்டி
இயற்கை விவசாய விளைபொருட்களை மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி INSTAGRAM, X, YOUTUBE போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது – சுவாமி ஸ்ரீமுகா
சத்குருவின் மண் காப்போம்’ இயக்கம் சார்பில் கோவை, சென்னையை தொடர்ந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0 திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. மண் காப்போம்’ இயக்கம், ஜி.டி என். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0 வேளாண் புத்தாக்கத் தொழில்கள் தொடர்பான கருத்தரங்கு. திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என். கலைக் கல்லூரியில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :-
விவசாயத்தில் விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு நின்று விடாமல் மதிப்புக்கூட்டல், பிராண்டிங், சந்தைப்படுத