மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கோவில் அதிகாரிகள் அவமதித்துவிட்டனர்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கோவில் அதிகாரிகள் அவமதித்துவிட்டனர் – தூய்மை பணியாளர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்; இல்லையெனில் பாஜக மிகப்பெரிய போராட்டம் நடத்தும்

கும்பாபிஷேகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அதிகாரிகளில் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

விஜயின் திரைப்படம் டிக்கெட் போல் கும்பாபிஷேக காசுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது

– வினோஜ் பி. செல்வம் பேட்டி*

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காமல் மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகள் அவமதித்து விட்டனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெரிதும் மதிக்கும் தூய்மை பணியாளர்களை அவமதித்ததை பாஜக கண்டிக்கிறது.

தூய்மை பணியாளர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் கோவில் முன்பு நடத்தப்படும் என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் பேச்சு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முறையாக நடத்தவில்லை என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, பாஜக சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் பங்கேற்றார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி. செல்வம், பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பணியாளர்களின் பணியைப் போற்றி பாத பூஜை செய்து வருகிறார்.

ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் அவமதித்து அனுப்பியுள்ளனர்.

தூய்மை பணியாளர்களை நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இல்லையெனில் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஸ் விற்பனை மற்றும் நன்கொடை வசூல் மூலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஜி-பே, போன்பே மற்றும் வங்கி கணக்குகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், விஜய் திரைப்படங்களின் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதைப் போன்று கோவில் பாஸ்களையும் பிளாக்கில் விற்பனை செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய் , தான் முதல்வர் என்பதை மறந்து எதிர்க்கட்சித் தலைவர் போல் பேசி வருகிறார். ஊழலில் திமுகவை மிஞ்சும் அளவிற்கு தமிழக வெற்றி கழகத்தினரின் செயல்பாடுகள் உள்ளன.

தவெக அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோவில்கள் மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் ரீல்ஸ் மட்டுமே எடுக்கின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படவில்லை.

புனித நீர் என தண்ணீரை பக்தர்கள் மீது காவல்துறையினர் தெளிக்கின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக கடவுளுக்கும் இந்து மக்களுக்கும் எதிராக செயல்பட்டதால் தான் அவர்களுக்கு இந்த நிலை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகளை பார்த்தால் அவர்களை விட இவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
என்று கூறினார்.

Visuval send on ingest
Mdu live bag
Mdu Bjp protest
C man : Arunkumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *