அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை
பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர்கள், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை
தமிழக அரசு மருத்துவமனையில்
3 மடங்கு மக்கள் வருகிறார்கள் என அமைச்சர் தனக்குத்தானே தம்பட்டம் அடிப்பதை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்
எடப்பாடியார் மருத்துவத் துறையில் எப்படி சாதித்து காட்டினார் என்ற வரலாற்றை அமைச்சர் மா.சு.படிக்க வேண்டும்
கழக மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன்
கடும் எச்சரிக்கை
மதுரை
மருத்துவத்துறையில் எடப்பாடியார் ஒரு சகாப்தம் படைத்தார் என்ற வரலாற்றை அமைச்சர் மா.சு படித்து அறிந்து கொள்ள வேண்டும் .
குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1,650 மருத்துவ இடங்களை உருவாக்கினார்,
மதுரை ,தஞ்சை போன்ற மூன்று இடங்களில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கினார். மருத்துவ இடங்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு மூலம் இதுவரை 3,456 அரசு மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
குறிப்பாக 2019 ஆண்டில் இந்தியா முழுவதும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது அதில் தமிழகத்தில் 253 மக்களுக்கு ஒரு மருத்துவர், டில்லியில் 334 மக்களுக்கு ஒரு மருத்துவர், கர்நாடகாவில் 507 மக்களுக்கு ஒரு மருத்துவர் ,கேரளாவில் 535 மக்களுக்கு ஒரு மருத்துவர், கோவாவில் 713 மக்களுக்கு ஒரு மருத்துவர் ,உத்திரபிரதேசத்தில் 767 மக்களுக்கு ஒரு மருத்துவர், சதீஸ்கரில் 338 மக்களுக்கு ஒரு மருத்துவர் ஆக தமிழகத்தில் தான் அதிக அளவில்
மருத்துவர்கள் உள்ள மாநிலமாக இருந்தது.
இந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியை கூட ஸ்டாலின் அரசு உருவாக்கவில்லை.தற்போது நோயாளிக்கு ஏற்றவாறு மருத்துவ பணியாளர்கள் இல்லை குறிப்பாக தற்போது 1.50 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளார்கள் ஆனால் தற்பொழுது தமிழகத்தில் 19,000 அரசு மருத்துவர்கள் தான் உள்ளார்கள். இதில் மருத்துவ எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்தால்தான் சரி செய்ய முடியும்
38 மேற்பட்ட அரசு மருத்துவமனை கல்லூரிகள், 372 தாலுகா மருத்துவமனைகள், 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 சுகாதார மையங்கள் என 11,000 மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் 35,000 மேற்பட்ட அரசு மருத்துவமனை காலி பணியிடங்கள் அம்மாவின் ஆட்சி காலத்தில் நிரப்பப்பட்டது.
ஆனால் இன்றைய நிலை என்ன? அமைச்சர் மா.சு. எதற்கெடுத்தாலும் அறிக்கை விடுகிறார் ஆனால் செயல்பாட்டில் ஒன்றும் இல்லை குறிப்பாக தமிழகத்தில் புறநோயாளிகள் 56 சதவீதம்,உள் நோயாளிகள் 43 சதவீதம்,அறுவை சிகிச்சைகள் 60 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகிறார்.
தற்போது ஆண்டுக்கு, ஆண்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஓய்வுபெற்று வருகிறார்கள் அந்தப் பணியிடங்களுக்கு இன்னமும் நிரப்பப்படவில்லை .
குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பத்தாயிரம் பேர் உள்ளனர் ஆனால் அரசு மருத்துவமனையில் 1100 பேர் தான் உள்ளார்கள் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது இதில் 55 சதவீதம் அரசு மருத்துவமனையிலும், 45 சதவீதம் தனியார் மருத்துவமனையில் நடைபெறுகிறது. குறிப்பாக பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் சென்றால் அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்று மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.
மருத்துவத்துறையில் MBBS மருத்துவர்கள், MD/MS (PG) சிறப்பு மருத்துவர்கள், DM/MCh உயர் சிறப்பு மருத்துவர்கள் ( super speciality ) என்று உள்ளனர் இதில் உயர் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத இடத்திற்கு, சிறப்பு மருத்துவர்களை நியமிக்கிறார்கள்
சில இடங்களில் உயர் சிறப்பு மருத்துவர்களை நியமித்தால் ஏற்கனவே நியமனம் செய்தவர்களை ரத்து செய்து அனுப்பி விடுகிறார்கள். தற்பொழுது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது சிறப்பு மருத்துவரை மாற்றம் செய்யாமல் இருந்தால் தான் சமாளிக்க முடியும் இதையெல்லாம் அரசு செய்ய தவறிவிட்டது.
பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர்கள்,மகப்பேறு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு செய்யாமல் அதில் ஊழல் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்சி வருகிறார்கள் தற்பொழுது மருத்துவதுறை நேர்மை துறையாக இல்லாமல் ஊழல் துறையாக மாறிவிட்டது என கூறினார்.