மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூ.1.35 லட்சம் பறிமுதல்
பொறியாளர், தொழில் நுட்ப உதவியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட 14பேர் மீது வழக்கு பதிவு
மதுரை மாநகராட்சியில் நேற்று இரவு நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் என 10 பேரிடம் ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி தலைமை பொறியாளர் (சி.இ.,) அலுவலகத்தில் நேற்று இரவு சி.இ., ராமசாமிக்கு சிலர் பணம் கொடுக்க போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூர்யகலா, ரமேஷ்பிரபு, ஜெயபிரபா ஆகியோர் கொண்ட குழு சி.இ., அலுவலகத்தில் சோதனை நடத்தியது.
அப்போது சி.இ.யை பார்க்க வந்த பலர் பணம் வைத்திருந்தனர். அவர்களில் உதவி பொறியாளர்கள் பாலமுருகனிடம் ரூ.11 ஆயிரம், மயிலேறிநாதனிடம் ரூ.7 ஆயிரம், தொழில் நுட்ப உதவியாளர்கள் கோகுலன் ரூ.5 ஆயிரம், கார்த்திக் ரூ.19 ஆயிரம், செல்வக்குமார் ரூ.8 ஆயிரம், ஒப்பந்ததாரர்கள் ராஜாராம் ரூ.5 ஆயிரம், ரமேஷ் ரூ.13 ஆயிரம், ராதா ரூ.35 ஆயிரம், கருப்பசாமி ரூ.25 ஆயிரம், காண்ட்ராக்ட் பணியாளர் வினோத்மணி ரூ.7 ஆயிரம் வைத்திருந்தனர்.
அதற்கான உரிய கணக்கு அவர்களிடம் இல்லை. இதையடுத்து 10 பேரிடமிருந்தும் கணக்கில் வராத ரூ.1.35 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்திருந்த அனைவரும் சி.இ., ராமசாமிக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்சப் பணமாக இருக்கலாம் என்ற
பணத்திற்கான உரிய கணக்கு காட்டாவிட்டால் சி.இ., ராமசாமி உட்பட 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.