மதுரையில் பாடகர் எஸ்பிபி ஆறாவது ஆண்டு நினைவு நாளில் அவரின் பாடல்கள் பாடி நினைவஞ்சலி செலுத்தினர்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களின் இசைப்பங்களிப்பையும், அவரது இனிமையான பாடல்களையும் நினைவுகூரும் வகையில், மதுரை கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் எஸ்.பி.பால சுப்பிரமணியன் அவர்களின் பிரபலமான பாடல்களான ஆயர்பாடி மாளிகையில்…
சங்கீத ஜாதி முல்லை..
வான் போலே வண்ணம் கொண்டு…
வளையோசை கலகலகல…
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
மண்ணில் இந்தக் காதல் இன்றி..ஆகிய பாடல்களை பாடகர்கள் ஆசிக், ஜாஸ்மின், ஜோசப் கலந்து கொண்டு பாடினார்கள்
எஸ்பிபி யின் பாடல்கள் பாடி இசை அஞ்சலி செய்தனர்.

தொடர்ந்து இந்தநிகழ்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர் சுவாசிப்பை நிறுத்திக்கொண்டவர்கள் வாழ்ந்தவர்கள் அல்ல. வாழ்க்கையில் எதாவது சாதித்தவர்கள்தான் சமூகத்திற்கு நல்லது செய்தவர்களே வாழ்ந்தவர்கள். அத்தகைய புகழை எஸ்.பி.பி பெற்றுள்ளார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் உயிர்ப்போடு உள்ளது என்றார்‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *