
மதுரை கோச்சடை பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக ஆர்.எஸ்.எஸ். தேசியத் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு நேற்று முன்தினம் வருகை தந்திருந்தார்.
மதுரை தனியார் தங்கும் விடுதியில் கோச்சடை பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதத்தை, மீனாட்சி அம்மன் கோவில் சிவஸ்ரீ கணேசன் பட்டர், சிவஸ்ரீ சிவசேகர் பட்டர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் மோகன் பகவத்திடம் வழங்கினர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகைப்படம் கும்பாபிஷேக புனித தீர்த்தம் மீனாட்சி அம்மன் கோவில் அபிஷேக குங்குமம் விபூதி உள்ளிட்டவை ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத்திற்கு வழங்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் பிரசாதம் ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் வழங்கப்பட்ட நிகழ்வு மதுரையில் கவனம் பெற்றுள்ளது.