தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமான NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் 1,980 கோடி ரூபாய் முதலீட்டில், 1,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மினிபியா மிட்சுமியின் இயக்குநர் – தலைவர், கட்சுஹிகோ யோஷிடா, வணிக அதிகாரி மட்சுடா டாய்சுகே, ஆலோசனை அதிகாரி ஷிஷிடோ ஷோஜி, NMB மினிபியா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் யமசாகி யோஹி, குழுத்தலைவர் கியோஹரா மோகா மற்றும் மேலாளர் தமிழ்செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *