மயிலாடுதுறையிலிருந்து செங்குடி கிராமத்திற்கு கூடுதல் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து செங்குடி கிராமத்திற்கு கூடுதல் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செங்குடி கிராமத்திற்கு மயிலாடுதுறை வழியாக எலந்தங்குடி வழுவூர் வழியாக செங்குடி வரை அரசு பேருந்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடுதலாக இரவு நேரத்தில் பேருந்து அந்த கிராமத்திற்கு வந்து செல்ல வேண்டும் வெளியூர்களிலிருந்து இரவு நேரங்களில் மயிலாடுதுறையிலிருந்து செங்குடி வருவதற்கு பேருந்து இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து நிர்வாகத்திடம் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையிலிருந்து இரவு 7:45 மணிக்கு கூடுதலாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது இதனை வரவேற்கும் விதமாக அந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் பேருந்தில் ஏறி மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *