கிருஸ்தவ தேவாலம் மற்றும் கல்லறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கிருஸ்தவ தேவாலம் மற்றும் கல்லறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பனமங்கலம் கிராமத்தை சுற்றி நடுத்தெரு,வடக்கு தெரு,தெற்குதெரு, குமாரநத்தம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து சமூகங்களை சேர்ந்த இந்துக்கள் மட்டுமே வசிக்கக்கூடிய இக்கிராமத்தில் கிராம மக்கள் வழிப்படக்கூடிய வீரன்கோவில் அமைந்துள்ளது.மாற்று மதத்தினர் யாரும் வசிக்காத நிலையில் வீரன்கோவில் அருகே கிறிஸ்தவ தேவாலய கமிட்டி சார்பாக புதிய கிருஸ்தவ தேவாலம் அமைக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் போது கிராமமக்கள் அனுமதியின்றி பணிகளை தொடரக்கூடாது என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மராமத்து பணிகள் நடந்து வருகிறது.இதனை அறிந்த பனமங்கலம் கிராம மக்கள் மீண்டும் தேவாலயம் கட்டும் பணிகள் தொடங்ககூடாது எனவும் மேற்கண்ட இடத்தில் கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதி வழங்ககூடாது என வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *