சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்நிகழ்வை தேசிய நல்லாசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் வழிகாட்டியுமான செ. கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்நிகழ்வை தேசிய நல்லாசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் வழிகாட்டியுமான செ. கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கையில் இருந்து மதுரை வந்த குழுவினர்

சமணமலை எனும் கீழக்குயில்குடியை முதலில் பார்வையிட்டனர்.

கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை மிகுந்த செல்வாக்குடன் சமணப் பள்ளியாகவும் இல்லறத்தார் வணங்கும் இடமாகவும், துறவியர் உறையும் இடமாகவும் விளங்கிய திருவுருவகம் எனவும் அமிர்த பராக்கிரமநல்லூர், எனவும் மாடக்குளத்துக்கு கீழ் நாட்டாற்றுக் குயிற்குடி எனவும் கல்வெட்டுகளில் வழங்கப்படும் சமண மலையில் பேச்சிப்பள்ளத்தில் அமைந்துள்ள பாகுபலி,பாசுபத நாதர்,முக்குடை அண்ணல் சிற்பங்களையும் அதன் கீழ் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டனர், மராந்தக வீரநாராயணன் மனைவி வானவன்மாதேவி பெயரில் அமைந்த மாதேவிப் பெரும்பள்ளியையும் அதில் உள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டதோடு ஆடுறிச்சான் பாறை என வழங்கப்படும் இடத்தில் சமணப்படுக்கைகளும் தமிழி எழுத்துகளும் இடம் பெற்றுள்ளதோடு வெண்மை நிற செஞ்சாந்து ஓவியங்களும் இடம்பெற்றுள்ளதை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *