திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி – அமைச்சர் மதன்ராஜா உறுதி

மதுரை தமிழ்நாடு பாண்டியன் ஹோட்டலில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் மதுரை திருநங்கைகள் திருநம்பிகள் ஆவண மையம் இணைந்து நடத்திய திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், அமைச்சர் மதன் ராஜா பங்கேற்று, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தயாரித்த பொருட்கள் மற்றும் அவர்களின் தொழில் முயற்சிகளைப் பார்வையிட்டு கலந்துரையாடினார்.

தமிழகம் முழுவதும் சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இம்மாநாட்டில் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில் முயற்சிகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதன் ராஜா,

கடந்த ஆட்சியில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டன என்பது குறித்து தெரியவில்லை என்றும், தற்போதைய அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலம் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும், அவர்கள் மேற்கொள்ளும் தொழில்களுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மதன் ராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *