
மது போதைக்கு அடிமையாதல் தனிநபர் பிரச்சனை அல்ல.. சமூகப் பிரச்சனை.
தானம் அறக்கட்டளை ஆண்டுவிழாவில் மனநல மருத்துவ நிபுணர் கருத்து
தானம் அறக்கட்டளையின் 30 ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை அரங்கில் இன்று (2-ஆம் தேதி) நடைபெற்றது.
நிறுவன நாள் நிகழ்வில் உரையாற்றிய அதன் நிர்வாக இயக்குநர் எம்.பி. வாசிமலை, தானம் அறக்கட்டளையின் மூன்று தசாப்த கால சமூகப் பணிகளை நினைவுகூர்ந்ததுடன், பூடான் இயக்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் இந்நிகழ்வுடன் இணைத்துப் பேசினார்.
இந்த ஆண்டின் செயல்பாடுகளுக்கான மையக் கருத்தாக “முதன்மைப் போக்குடன் ஒருங்கிணைத்தல்” என்பதை அவர் முன்வைத்தார். இதற்கு வழிகாட்டும் தத்துவக் கொள்கைகளாக “கோட்பாட்டில் அறங்காவலர் கொள்கை; நடைமுறையில் சர்வோதயம்” ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். வளர்ச்சித் தத்துவம் மற்றும் ஜே.சி. குமரப்பா போன்ற சிந்தனையாளர்களின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, வளர்ச்சி மற்றும் பொருளாதார அமைப்புகள் குறித்த பல்வேறு கருத்தாக்கங்களை அவர் விளக்கினார். அவற்றின் அடிப்படையில் தானம் அறக்கட்டளையின் பல்வேறு கருப்பொருள் சார்ந்த தலையீடுகள் எவ்வாறு படிப்படியாக வளர்ச்சி பெற்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
வாழ்வாதார மேம்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு, சமூக நிறுவனங்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை தனித்தனியாக அணுகாமல், அவற்றை ஒருங்கிணைத்த முழுமையான அணுகுமுறையின் மூலம் செயல்படுத்துவதே தான் அறக்கட்டளையின் அணுகுமுறை என்றார். நிறுவன நாள் உரையில் தேர்வு செய்யும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத் தரம். சமூகங்கள் மற்றும் சூழலியலின் முழுமையான வளர்ச்சி. சுழற்சி முறையிலான உள்ளூர் பொருளாதாரங்கள். நிலையான வாழ்வாதாரங்கள். சமூக உரிமையுணர்வு மற்றும் சமூக நிறுவனங்கள். கலப்பு நிதி. வறுமை ஒழிப்பு மற்றும் நிலைத்தன்மை. பல அடுக்குகளைக் கொண்ட சமூக நிர்வாகம். உள்ளூர் முதல் உலகளாவிய வரையிலான வலையமைப்புகள். அடித்தள நிலையில் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தரவு அறிவியல். குடும்பங்கள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கான ஒவ்வொரு கருப்பொருள் சார்ந்த தலையீட்டையும் முதன்மைப் போக்குடன் ஒருங்கிணைத்தல் ஆகிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
களஞ்சிய அறக்கட்டளை தலைவி ஏ. உமாராணி, களஞ்சியம் திட்டத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். 20 லட்சம் குடும்பங்களைச் சென்றடைவது என்ற இலக்குடன், வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரட்டை நோக்கங்களை களஞ்சியம் இயக்கம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். களஞ்சியம் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சாதனைக்குப் பின்னணியில் சமூக உரிமையுணர்வும், சமூகத் தலைவர்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்புடன் செயல்படும் தான் அறக்கட்டளைப் பணியாளர்களின் பங்களிப்பும் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார். தற்போது களஞ்சியம் இயக்கத்தின் கீழ் சுமார் 170 தற்சார்பு கொண்ட கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இக்கூட்டமைப்புகள் கணிசமான அளவிலான சமூகச் சேமிப்புகளைக் கொண்டுள்ளன. கூட்டமைப்புகளின் மூலம் ஏழைப் பெண்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த சேமிப்பு சுமார் ₹1,777 கோடி எனத் தெரிவித்தார்.
செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் மனநல மருத்துவர் சி. ராமசுப்பிரமணியன் பேசும்போது, இன்றைக்கு குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறவர்கள் வயது குறைந்துவிட்டது. பள்ளி மாணவர்கள் போதைக்கு ஆளாகிறார்கள். மகளிரிடமும் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. குடிப்பழக்கத்தையும், மனநோயும் தீர்க்கக் கூடியது ஆனால் ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் இவற்றை சுலபமாக அகற்றி விடலாம். போதை தனிப்பட்டவர் பிரச்சனையோ அவரது குடும்பப் பிரச்சனையோ அல்ல, சமூகப் பிரச்சனை என்பதனை உணர்ந்து போராடினால் தான் விடிவு கிட்டும். தடைகளை தாண்டி வெற்றிப் படிகளை அடைவது எளிதாகும் என்று கூறினார்.
இரத்த சோகையிலிருந்து வளர் இளம் பெண்கள் மீட்கப்பட்டது குறித்தும், மது போதையில் இருந்து குடிப்பழக்கம் உள்ளவர்கள் விடுபட சுகம் அறக்கட்டளை ஆற்றிய பணிகள் குறித்தும் பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மது போதை மீட்பு குறும்படம் வெளியிடப்பட்டது. மதுபோது மீட்பு குறித்த புத்தகம் டாக்டர் ராமசுப்பிரமணியன் வெளியிட மற்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக மகாராஷ்டிரா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விமலா, திரு சக்திவேல் மாவட்ட வருவாய் அலுவலர் மதுரை, திரு. சீனிவாஸ் உதவி பொது மேலாளர் கனரா வங்கி மதுரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
வறுமையிலிருந்து மீண்டது எவ்வாறு என்பது குறித்து திருமதி லட்சுமி அம்மாள், திரு. சாத்தையா திருமதி. கௌரி திருமதி.தீபா ஆகியோர் விளக்கினர். வறுமையில் இருந்து மீண்டவர்கள் குறித்த விளக்கம் புத்தகத்தை திருமதி விமலா ஐஏஎஸ் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வங்கி உதவி பொதுமேலாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நீர் நிலைகளில் இருந்து ஆக்கிரமிப்பை அகற்றியது குறித்து திரு .மாணிக்கம் ஆவுடையார் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு பீகார் ஆந்திரா மாநிலங்களில் 287 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது குறித்த செய்தியை திட்ட தலைவர் இளமுகில் கூறினார்.
வயலக பவுண்டேஷன் திட்டத்தலைவர் மோகன் இதுவரை 5,187 நீர்நிலைகள் மேம்பாடு மூலம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் குடும்பங்கள் மறுமையில் இருந்து மீண்டுள்ளார். கடந்த வருடம் வயலக பவுண்டேஷன் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது என்றார்.
தமிழ்நாடு, கேரளா, பீகார், ஆந்திரா, ஒடிசா. அசாம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள களஞ்சியம் சுகம் வயலகம் கடற்ப வளர்ச்சி ஆகிய பகுதிகளில் பயிற்சி எடுத்துக் கொண்ட ஊழியர்களுக்கு ஐடிசி ஹைதராபாத் துணைத் தலைவர் சிவகுமார் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் “மகாத்மா காந்தியை குறித்து நாம் அனைவரும் இன்றும் பேசுகிறோம். அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் அவரோடு உறவாடிக் கொண்டிருக்கிறோம். சமுதாயத்திற்கு ஒவ்வொரு மனிதனும் என்ன கொடுக்க முடியும் என்பதை நமக்கு காந்தி தெளிவாக சொல்லிக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.
நிறுவன நாள் கொண்டாட்டத்தையடுத்து தானம் உழவரகம் அறக்கட்டளை, தானம் நெய்தல் அறக்கட்டளை, புவியியல் தகவல் அமைப்பு மற்றும் வரைபட மையம் என மூன்று புதிய முன்னெடுப்புகள் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன:
பெண்களின் முன்னேற்றம் நிலைத்த நீடித்த வாழ்வாதாரம் குறித்த கலந்துரையாடலை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் விமலா நிகழ்த்தினார். இவருடன் ஏ குருநாதன் திட்ட தலைவர் மற்றும் எஸ் அகிலா தேவி பங்கேற்றனர். என் வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.
சுகாதாரத்தில் சமூகத்தின் பங்கு செயல்பாடுகள் மாற்றங்கள் குறித்து ஷாட் பவுண்டேஷன் மகாராஷ்டிரா மற்றும் மேல கொடுமலூர் பெரிய கண்மாய் நீர் பாசன குழு தமிழ்நாடு செல்லியம்மன் நகர் பழங்குடி மீனவர்கள் சொசைட்டி பழவேற்காடு திருவள்ளுவர் மாவட்டம் உரையாடல் செய்யப்பட்டது. திரு சிங்கராயர் ஜேம்ஸ் சாமுவேல் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தனர்.
ஆண்டு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பாரம்பரிய சுற்றுலா வளர்ச்சிக்கான ஆர்வலர் கே.பி பாரதிக்கு, தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் எம். பி வாசிமலை வழங்கி வாழ்த்தினார்.
ஆண்டுவிழாவினையொட்டி களஞ்சியம் இயக்கம் சமூக விருது, மகாராஷ்டிரா, ஷிங்கோலி சரத் அறக்கட்டளைக்கு பணப்பரிசாக ரூ 50,000 வழங்கப்பட்டது. வயலகம் இயக்கம் சமூக விருது தமிழ்நாடு மேலக்கொடுமலூர் பெரியகண்மாய் நீர்ப்பாசனக் குழுவுக்கு பணப்பரிசாக ரூபாய் 1,00,000 வழங்கப்பட்டது. நெய்தல் இயக்கம் சமூக விருது தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் செல்லியம்மன் நகர் பழங்குடியினர் மீனவர் சங்கத்துக்கு பணப்பரிசாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. சமூகத்தின் முன்னெடுப்பிலான வளர்ச்சி மற்றும் கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அடித்தள சமூக நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
திரு சிவானந்தன் திட்டத் தலைவர் களஞ்சியம் பவுண்டேஷன் நன்றி கூறினார்