தமிழக முதலமைச்சர் ஜோசப் வருகை எதிரொலியாக 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் வாய்கால் தகரத்தை கொண்டு மறைக்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் ஜோசப் வருகை எதிரொலியாக 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் வாய்கால் தகரத்தை கொண்டு மறைக்கப்பட்டது

மதுரையில் 28ஆம் தேதி தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை வருகிறார்

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் விழாவிற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்

அதன்படி, மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை விழுப்புரம் உள்ள கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணி நடைபெறுகிறது. அதே போல குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு புதிய தாட்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள பாசன வாய்க்கால் தற்போது கழிவுநீர் வாய்க்காலாக செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் கோரிப்பாளையம் முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை 1 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் வாய்க்காலை தகரங்கள் கொண்டு மறைக்கப்பட்டு வருகிறது

முதலமைச்சர் பார்வையில் கழிவுநீர் வாய்க்கால் தெரியக்கூடாது எனவும், முதலமைச்சரை பார்க்க வரும் பொதுமக்கள் பாசனவாய் விழுந்து விடக்கூடாது எனும் நோக்கில் தகரங்கள் கொண்டு மறைக்கும் பணிகள் நடைபெறுகிறது

திமுக ஆட்சியின் பொழுது அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தபோது இதேபோல பந்தலக்குடி பாசன வாய்க்கால் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டது

இதனை அறிந்த மு.க.ஸ்டாலின் பந்தல்குடி பாசன வாய்க்காலை நேரில் பார்வையிட்டு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பாசன வாய்க்கால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *