திருப்பரங்குன்றத்தில் வருகின்ற 9.ம் தேதி மலைமேல் வேல் எடுக்கும் விழா

திருப்பரங்குன்றத்தில் வருகின்ற 9.ம் தேதி மலைமேல் வேல் எடுக்கும் விழா

முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரத்திற்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு

திருப்பரங்குன்றம், செப். 5- திருப்பரங்குன்றத்தில் வருகின்ற 9.ம் தேதி வெள்ளிக்கிழமை மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெறுவதை ஒட்டி முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரத்திற்கு வெற்றிலை, பாக்கு வைத்து கிராம மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மலைமேல் வேல் எடுக்கும் விழாவும் ஒன்று. கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்படும் இந்த விழாவானது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தெய்வப்புலவர் நக்கீரரின் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் விவசாயம் செழிக்க வேண்டியும், கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி, மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் உள்ள சுணை தீர்த்தத்திற்கு கொண்டு சென்று அங்கு வேலுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பக்தர்களுக்கு கதம்ப சாதம் அன்னதானமாக வழங்கப்படும். விழாவில் மலை மேல் உள்ள குமரருக்கு தங்க வேலை சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனை தொடர்ந்து வேல் மழை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் சன்னதிக்கு கொண்டு சென்று அங்கு பழனியாண்டவர் பிரச்சாரத்தில் வேல் சேர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நகரின் முக்கிய வீதியில் வழியாக வேல் கொண்டு செல்லப்பட்டு முருகனின் திருக்கரத்தில் சேர்க்கப்படும் முழுக்க முழுக்க கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்படும். இந்த விழாவில் பங்கேற்க கோயில் முதல் ஸ்தானிகப்பட்டர் சாமிநாதன் தலைமையில் கிராம மக்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முக சுந்தரத்திற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: திருப்பரங்குன்றம் பகுதியை சுற்றியுள்ள 43 கிராம மக்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை பார்க்க வைத்து அழைப்பு விடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

பட விளக்கம் : திருப்பரங்குன்றத்தில் மலைமேல் வேல் எடுக்கும் விழாவிற்கு முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரத்திற்கு, கோயில் முதல் ஸ்தானிகப்பட்டர் சாமிநாதன் தலைமையில் கிராம மக்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்த போது எடுத்த படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *