2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் உன்னத இலக்கை அடைய அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது என மதுரையில் அமைச்சர் மதன் ராஜா பேச்சு
மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் தமிழ்நாடு பாண்டியனில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் மதுரை திருநங்கையர் மற்றும் திருநம்பிகள் ஆவண மையம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான ‘திருநர் தொழில் முனைவோர் மாநாடு – 2026’ மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா பங்கேற்று, தொழில் முனைவோர்களின் தயாரிப்புகள் மற்றும் தொழில் முயற்சிகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில் முயற்சிகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். விழாவில் அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி. 2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் உன்னத இலக்கை அடைய அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது. இம்மாநாட்டின் நோக்கமானது அதிகாரமளித்தல், இணைத்தல், ஒருங்கிணைத்தல், உயர்த்துதல் ஆகிய நான்கு தூண்களைக் கொண்டது. பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டம், கடன் உதவி, இயந்திர உதவி மற்றும் StartupTN-ன் மூன்றாம் பாலினத்தவர் புத்தொழில் திட்டம் போன்ற தமிழக அரசின் சிறப்பான திட்டங்களைப் பயன்படுத்தி மேலும் பல திருநர் தொழில்முனைவோர் உருவாக வேண்டும். சமூகத் தடைகளைத் தாண்டி இன்று தொழில் முனைவோர்களாக உயர்ந்து நிற்கும் உங்கள் அடையாளத்தை உங்கள் பலமாகவும், உங்கள் தொழிலை உங்கள் முகவரியாகவும் மாற்றிக் கொள்ளுங்கள். தொழில் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இவர்களுக்குத் துணைநிற்க வேண்டும். தமிழ்நாடு அரசு உங்கள் தொழில்முனைவுப் பயணத்தில் எப்போதும் துணைநிற்கும்.” என கூறினார். மேலும், திருநர் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு மற்றும் சந்தை இணைப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், முன்னணி தொழில் வளர்ப்பு மையங்களான TSOM Incubation Association மற்றும் Solamalai Foundation for Startup Incubation ஆகியவற்றுடன் ஆவண மையம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Visuval send on ingest
Mdu live bag
Minister byte