தாராபுரம் நகராட்சி 7 வார்டுகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் நகராட்சி 7 வார்டுகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி, தாராபுரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட 7 வார்டுகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக மாண்புமிகு மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு அரசு சட்டமன்ற பொது கணக்கு குழு உறுப்பினரும், மதுரை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. சோ. கார்த்திகேயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். எம். கோபிசன் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. யுவராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தாராபுரத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு, தாராபுரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட 7 வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழக முதலமைச்சரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களின் வெற்றிக்காக மேற்கொள்ள வேண்டிய தேர்தல் வியூகங்கள், வாக்காளர்களை சந்திக்கும் பணிகள், வார்டு வாரியான களப்பணிகள் மற்றும் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட உள்ள தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.

மேலும், தாராபுரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக மேற்கொள்வது குறித்தும், கழக நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர், நகர துணைச் செயலாளர், வட்டக் கழக நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன், மதுரை கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மதுரை தெற்கு தொகுதி கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *