முழு கை சட்டை அணிந்தால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கலாம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு Personal Protection என்பது மிகவும் முக்கியம் என மதுரையில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு.தாரேஸ் அகமது பேட்டி

முழு கை சட்டை அணிந்தால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கலாம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு Personal Protection என்பது மிகவும் முக்கியம் என மதுரையில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு.தாரேஸ் அகமது பேட்டி

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு.தாரேஸ் அகமது மதுரையில் பேட்டி

மதுரை சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும்டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு.தாரேஸ் அகமது நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் மதுரை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு.தாரேஸ் அகமது,”தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்தாண்டு 2.23 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், கோவை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5818 தினசரி காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
26303 பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல்.
அனைத்து அரசு மருத்துவமனைகளில் எல்லா விதமான மருந்துகளும் இருப்பில் உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு

தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளி, கல்லூரி வளாகங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது காய்ச்சல் பாதிப்புகள் எவ்வளவு பதிவாகியுள்ளது?

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு.
கடந்த 2024 ஆம் ஆண்டு 35,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டு 25585 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இந்தாண்டு ஜனவரி முதல் செப் 23 வரையில் 17939 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் 1637 பேர் டெங்கு காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கை சட்டை அணிந்தால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கலாம் என அமைச்சர் அருண்ராஜ் கூறிய கருத்துக்கு

Personal Protection என்பது மிகவும் முக்கியம். காலையில் தான் டெங்கு கொசுக்கள் கடிக்கிறது. எனவே வீடுகளில் கொசு வலை போடுவதும் மிகவும் முக்கியமான ஒன்றுதான்.

எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *