தாராபுரம் இடைத்தேர்தலில் அமைச்சர் கீர்த்தனா தலைமையில் சோழவந்தான் கருப்பையா எம்எல்ஏ முன்னிலையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

தாராபுரம் இடைத்தேர்தலில் அமைச்சர் கீர்த்தனா தலைமையில் சோழவந்தான் கருப்பையா எம்எல்ஏ முன்னிலையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

சோழவந்தான் செப்டம்பர் 27

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி நடைபெறும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் ஒன்றியப் பகுதிகளில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா முன்னிலையில், வாடிப்பட்டி தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புதூர், தங்கமேடு, வடக்கு வாசு நாயக்கர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது கருத்துகளையும் ஆதரவையும் கேட்டறிந்தனர்.
பல இடங்களில் பொதுமக்கள் வரவேற்று, தங்களது இல்லங்களுக்கு அழைத்து உபசரித்து, உணவு வழங்கி தங்களது அன்பையும் வரவேற்பையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வுகளில் ஒன்றியச் செயலாளர், பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தனர் முதல் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா நிர்வாகிகள் கொரியர் கணேசன் அரியூர் ராதாகிருஷ்ணன் பங்களா மூர்த்தி வழக்கறிஞர் அழகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *