சமூகத்திற்காக வாழ்ந்தவர்களே சாதனையாளர்கள் பாடகர் எஸ் பி பி ஆறாவது ஆண்டு நினைவு நாளில் மதுரை மேயர் நாகராஜன் பேச்சு.*
வாசிப்பை நிறுத்திக் கொண்டவர்கள் எல்லாம் சாதனையாளர்கள் அல்ல. இந்த சமூகத்திற்காக வாழ்ந்தவர்களே சாதனையாளர்கள் என மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியனின் ஆறாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன் பேசினார்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களின் இசைப் பங்களிப்பையும், அவரது இனிமையான பாடல்களையும் நினைவுகூரும் வகையில், மதுரை கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர்நெல்லை பாலு தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி.பால சுப்பிரமணியன் அவர்களுக்கு அவரது பிரபலமான பாடல்கள் மூலம் பாடல்கள் பாடி மெல்லிசை பாடகர் ஆஷிக் மற்றும் அவரது மனைவி இசை அஞ்சலி செய்தனர்.
நிகழ்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை மேயர் நாகராஜன் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது.,
சுவாசிப்பை நிறுத்திக்கொண்டவர்கள் வாழ்ந்தவர்கள் அல்ல. வாழ்க்கையில் எதாவது சாதித்தவர்கள்தான் சமூகத்திற்கு நல்லது செய்தவர்களே வாழ்ந்தவர்கள். அத்தகைய புகழை எஸ்.பி.பி பெற்றுள்ளார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் உயிர்ப்போடு உள்ளது. அவரது நினைவுநாளில் நெல்லை பாலு நல்ல உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு செய்துள்ளார்.அவர் தொடர்ச்சியாக மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார். அவரது சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்வில் பாடகர் ஜோசப் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்காக ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.