மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு
மதுரை கோட்டத்தில் ரயில் நிலையங்களில் தரமான குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. குடிநீரை சுத்திகரிக்க பயன்படும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்ன பரிசோதிக்கப்படுகிறது. மேலும் குடிநீரில் உள்ள அமிலத்தன்மை, ஆக்ஸிஜன், கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் சரியான அளவில் உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படுகிறது. குடிநீரில் பாதகம் ஏற்படுத்தும் நுண்ணுயிரி உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படுகிறது. இந்த அளவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வாரம் ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட 230 குடிநீர் மாதிரி பரிசோதனைகளில் 205 மாதிரிகளில் குளோரின் சரியான அளவில் இருந்தது. அதே போல 39 மாதிரி நுண்ணுயிரி பரிசோதனைகளில் 35 மாதிரிகள் நுண்ணுயிரிகள் இல்லாமல் திருப்திகரமாக இருந்தது. இந்த பரிசோதனைகள் மூலம் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சரி செய்யப்பட்டு தரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய தணிக்கை குழு வழங்கிய ஆலோசனைகளின் படி மதுரை கோட்டத்தில் குடிநீர் மாதிரிகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. நிர்மூலம் ரயில் பயணிகளுக்கு தரமான சுத்தமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது