ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டமதுரை காந்தி மியூசியத்தை முதல்வர் வருகிற 28ந்தேதி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட
மதுரை காந்தி மியூசியத்தை முதல்வர் வருகிற 28ந்தேதி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்*

மதுரை காந்தி மியூசியம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரூ.10.25 கோடியில் காந்தி மியூசியம் புனரமைக்கப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காந்தி மியூசியத்தை திறக்க கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று வருகிற 28ஆம் தேதி மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை துவக்கி வைக்க வருகை தரும் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் காந்தி மியூசியத்தை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்க இருக்கிறார்.
இதற்காக காந்தி மியூசியம் முழுவதும் வண்ண விளக்குகுகளின் ஒளி வெள்ளத்தில் மிளிர்கின்றன.

பழமை மாறாமல் சுவர், மேல்தளம் புனரமைப்பு பணிகள் செய்தனர். அதோடு டிஜிட்டல் போட்டோ, டிஜிட்டல் டிஸ்பிளே பணிகள், தமிழ் மொழி பெயர்ப்பு பணிகள் என அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.

ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மியூசியம் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலை திறப்புவிழா தள்ளிப்போனது. இந்த நிலையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை துவக்கி வைக்க வருகை தரும் விஜய் அவர்கள் காந்தி மியூசியம் திறந்து வைப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்திக்கு முன்னதாக திறந்து வைக்க திட்டமிடப்பட்டனர்.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதோடு காந்தி அருங்காட்சியக பொறுப்பாளர் நந்தாராவ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனையும் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *