திருமங்கலம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ வளைகாப்பு விழா:
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் சி.ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடன் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று 11/10/2026 கள்ளிக்குடி பொன் வைரமுத்து மகாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.பி.முத்துப்பாண்டி, எம்.என்.முனியாண்டி, எம்.முனியாண்டி, மணிகண்டன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட கிராமங்களை சேர்த்த 150 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பட்டுச்சேலை வளையல்கள் பழங்கள் அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருமங்கலம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் செந்தில்குமார், மருதுவெங்கடேஷ். வருண்சுந்தர். AGS.சரவணகுமார் துரைமுருகன் அலெக்ஸ் பிரகாஷ். அய்யனார், மணிகண்டன் பொண்ணுப்பாண்டி ஜெய்கிருஷ்ணன். பிரபா, M. ஸ்ரீராம், M.சரவணன், SM.சங்கர், வேலு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.