தூய்மை பணியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், அரசாணை 152 மற்றும் 139யை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையரிடம் பெருந்திரளாக சென்று மனு அளித்து போராட்டம்*
மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது, அதனை நம்பியுள்ள மாநகராட்சி பணியாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும், தூய்மை பணி, மின்துறை என அரசு துறைகளை தனியார்மயமாக்க முயற்சிப்பதில் தவெக அரசுக்கு மாநகராட்சி தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் குற்றச்சாட்டு
தூய்மை பணியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், அரசாணை 152 மற்றும் 139யை ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சி தனியார் ஒப்பந்த நிறுவனமான அவர்லேண்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி / தொகுப்பூதியம்/ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்திட வேண்டும்
வாரிசு வேலை வழங்கிட வேண்டும் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக 8.33 சதமானம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ் நாடு ககாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் , தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பெரும்திரள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளிலும் அனைத்து பிரிவுகளின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் கலந்துகொண்டு மனுக்களை ஆணையாளரிடம் வழங்கினா்.
மேலும் வரும் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது, அதனை நம்பியுள்ள மாநகராட்சி பணியாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும், தூய்மை பணி, மின்துறை என அரசு துறைகளை தனியார்மயமாக்க முயற்சிப்பதில் அரசு ஒரே கொள்கையே உள்ளது எனவும் குற்றம்சாட்டினா்.