தலைவருக்காக தான் நீங்கள் வாக்களித்தீர்கள் எம்எல்ஏக்களுக்காக அல்ல என மதுரையில் அமைச்சர் என் ஆனந்த் பேச்சு

எதிர்கட்சிகள் குறை சொல்லிகொண்டே தான் இருப்பார்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்: மதுரையில் அமைச்சர் என் ஆனந்த் பேச்சு*

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த பொதுப்பணித்துறை அமைச்சரும் தாவெக பொதுச் செயலாளருமான என்.ஆனந்த் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவரது ஏற்பாட்டில் நடைபெற்று வரும் அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் தேர்வு பெட்ரோலுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:

எங்க அண்ணன் ஒரு எம்எல்ஏ எதை செய்யனுமோ அரசு பதவிகளில் மாணவர்கள் வர வேண்டும் என விரும்புகிறார் என்றால் அது தான் முதலமைச்சர் வழிகாட்டுதல்

கோபக்கார்ர் படபடவென பேசுவார் மனதில்வைத்துகொள்ள மாட்டார். முதலமைச்சரிடம் உரிமையோடு தொகுதிக்கான தேவையை கேட்பவர்

மதுரையில் 10 தொகுதியில் 9 தொகுதியில் டிவிகே எம்எல்ஏக்கள் தான் உள்ளனர்.
வரும் தேர்தலில் அந்த ஒரு தொகுதியையும் வெல்வோம், மதுரை நமது் தலைவரின் கோட்டை.

அரசு பதவி என்பது சாதாரணமானது அல்ல; அமைச்சராக இருந்தாலும் திட்டங்களை உடனுக்குடன் செய்ய கூடிய அதிகாரிகள் உள்ளனர். முதலமைச்சர் எக்காரணம் கொண்டும் ஊழலற்ற அரசு இருக்க வேண்டும் என்றார் 5 மாதமாக இதனை கடைபிடிக்கிறோம். இது மட்டுமல்ல இனிவரும் 25 ஆண்டும் ஊழல் இருக்காது

தலைவருக்காக தான் நீங்கள் வாக்களித்தீர்கள் எம்எல்ஏக்களுக்காக அல்ல; பிளைட்ல வரும் போது என்னை பார்த்து நல்லா ஆட்சி பண்றங்க உங்களுக்கு ஓட்டு போட்டது் மகிழ்ச்சி என கூறினார்கள்

முதலமைச்சர் எண்ணப்படி எந்த தவறும் செய்யாமல் இருப்போம், முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றுவோம்

டவுசர் போட்டுகொண்டு போஸ்டர் ஒட்டிய தொண்டர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியிருக்கிறார் எங்கள் தளபதி.

எதிர்கட்சிகள் குறை சொல்லிகொண்டே தான் இருப்பார்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *