மதுரை மடீட்சியாவில்

மதுரை, அக்.15:
மடீட்சியா தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் அசோக், அரவிந்த், முகம்மது யாசிக், கண்காட்சித்தலைவர் ராஜமுருகன், டாக்டர் ஜெய வெங்கடேஷ், கார்த்திக் ராஜா, ராஜேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி,யோகா மற்றும் நேச்சுரோபதி பற்றிய தொழில் கண்காட்சி 8வது முறையாக மதுரையில் அக்.16(நாளை) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.
ஒன்றிய, மாநில அரசுகளின் பாரம்பரிய மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து மடீட்சியா நடத்தும் இக்கண்காட்சியில் இந்திய மருத்துவ உற்பத்தியாளர்களின் 90க்கும் அதிக அரங்குகள் அமைகிறது. தினமும் கண்காட்சி காலை 10மணி துவங்கி, இரவு 7மணி வரை நடக்கிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அக்.16ல் கண்காட்சியை மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ, கோபிசன் தொடங்கி வைக்க, மாநகராட்சி கமிஷனர் கௌரவ் குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, ஆயுஷ் நலவாழ்வு பற்றிய தொழில் கருத்தரங்குகள், அரியவகை மூலிகைச் செடி கண்காட்சிகள், இலவச மருத்துவ முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.